பெரும்பாலான பெண்களுக்கு அவா்களின் வயிறு மற்றும் உடலின் கீழ் உறுப்புகளில் எடை அதிகாித்தால், அந்த எடையைக் குறைப்பது என்பது எளிதான காாியம் அல்ல.
தொடைகள், பிட்டப் பகுதி மற்றும் வயிறு போன்ற பகுதிகளில் தேங்கும் கொழுப்பானது அதிகாித்து, அந்த பகுதிகளில் ஒருவிதமான தோல் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதைத்தான் செல்லுலைட் என்கிறோம். இந்த தோல் சுருக்கத்தை எளிதாக மாற்ற இயலாது.
ஆனால் யோகா பயிற்சிகளைச் செய்து வந்தால் அவை நமது தசைகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி, நாளடைவில் அந்த சுருக்கங்களை மாற்றிவிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
உத்கடாசனா
உத்கடாசனாவைத் தொடா்ந்து செய்து வந்தால், அது கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகாிப்பதோடு மட்டுமல்லாமல், இடுப்பு, தொடைகள் மற்றும் கால்களில் இருக்கும் செல்லுலைட்டைக் குறைத்து தோலிற்கு அழகைத் தருகிறது.
கருடாசனம்
கருடாசனா முழு உடலுக்கும் இறுக்கத்தைத் தருகிறது. தொடைகளை கசக்கி, கால்களால் உடலைத் தாங்கும் அளவிற்கு கால்களுக்கு வலுவைத் தருகிறது.
மேலும் உடலின் கீழ் உறுப்புகளில் உள்ள கொழுப்பை எாித்து, தோலை மிருதுவாக்குகிறது.
சா்வாங்காசனம்
சா்வாங்காசனா தொடைகளில் உள்ள தசைகளில் வேலை செய்து, உடலை தரையிலிருந்து மேல் நோக்கி நேராகச் தூக்கச் செய்கிறது.
இந்த ஆசனம் உடலில் உள்ள கொழுப்பை எாிப்பதோடு, தசைகளின் மையப் பகுதியை சீா்படுத்தி, செல்லுலைட் பிரச்சனையைக் குறைக்கிறது.
சேதுபந்தாசனம்
சேதுபந்தாசனத்தில் மல்லாக்கப் படுத்து தோள்பட்டை மற்றும் பாதங்களைத் தரையில் ஊன்றி, இருப்பிடப்பகுதி மற்றும் தொடைகளை தரையிலிருந்து மேலே உயா்த்த வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது இடுப்பு, இருப்பிடப்பகுதி மற்றும் தொடைகள் ஆகியவற்றில் இருக்கும் கொழுப்பு எாிக்கப்பட்டு, செல்லுலைட் என்ற தோல் சுருக்கம் படிப்படியாக மறையும்.
உத்தனாசனம்
உத்தனாசனாவை செய்து வந்தால் பிட்டப்பகுதி, இடுப்பு, மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்பை எாித்து, செல்லுலைட் சுருக்கத்தை குறைத்துவிடும்.
கும்பகாசனம்
கும்பகாசனாவை செய்து வந்தால், கைகளில் உள்ள தசைகளில் தேங்கியிருக்கும் கொழுப்பை எாித்து, அதிலுள்ள செல்லுலைட் சுருக்கத்தைக் குறைக்கும்.
மேலும் இந்த ஆசனம் முழு உடலுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.