ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது வெளிர் ஊதா நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடி நித்தியகல்யாணி செடி ஆகும்.
இதன் இலைகள், பூக்கள், தண்டு மற்றும் வேர்கள் என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த மருத்துவ பயன்கள் கொண்டவை.
இந்த நித்ய கல்யாணியின் தாவரவியல் பெயர் காதரென்தஸ் ரோளியஸ் ஆகும்.
இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, என பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.
நித்திய கல்யாணி செடி பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகின்றது. குறிப்பாக புற்றுநோய்க்கு இத்தாவரத்தின் வேரில் உள்ள குறிப்பிட்ட மருந்துப்பொருள் புற்றுநோய் மருத்துவத்தில் கீமோ தெரபி சிகிச்சைக்கு பயன்படுவதாக அமெரிக்கா கண்டறிந்துள்ளது.
தற்போது இதில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
- நித்திய கல்யாணி இலைச்சாறு இரண்டொரு தேக்கரண்டி எடுத்து வெருகடி மஞ்சள் சேர்த்து தீநீராக்கிக் குடிப்பதால் சர்க்கரை நோய் தணியும். பேதியும் நிற்கும்.
- நித்திய கல்யாணி செடியின் வேர்ப்பகுதியை எடுத்து சுத்திகரித்து மிளகு, சீரகம் இரண்டையும் வெருகடி அளவு எடுத்து அதனுடன் 10 கிராம் நித்திய கல்யாணி வேரையும் சேர்த்து நீர் விட்டு தீநீராய்க் காய்ச்சி பருகுவதால் பல் வலி, உடல் வலி ஆகியன போகும்.
- நித்திய கல்யாணி பூக்கள் 10 இலைகள், 5 மாதுளை தோல் 10 கிராம் அளவு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு, அரை டம்ளராகச் சுருங்கக் காய்ச்சி உடன் தேவையான சுவைக்குத் தேன் சேர்த்து தினம் இருவேளை சாப்பிட அதிக ரத்தப்போக்குடன்கூடிய மாதவிலக்கு குணமாகும்.
- நித்திய கல்யாணி பூக்கள் 10 எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து தீநீராக்கிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு குணமாகும்.
- நித்திய கல்யாணி பூக்களை பத்து எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் கண்களைக் கழுவ கண் நோய்கள் குணமாகும். இதைக் கொண்டு ஆறாதப் புண்களைக் கழுவி வர விரைவில் ஆறும்.
- நித்திய கல்யாணி பூக்கள் 10 முதல் 15 எடுத்து அதனோடு மஞ்சள் சேர்த்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து தேன் சேர்த்துப் பருகி வர எவ்வகைப் புற்றுநோயும் விலகும்.