வேல்ஸ் நாட்டில், பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஒருவரான செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதால் அவர் சோகமடைந்துள்ளார்.
வேல்ஸ் நாட்டில் முதன்முதலில் கொரோனா தடுப்பூசி போடத்தொடங்கியதும், டிசம்பர் 8ஆம் திகதி முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களில் செவிலியரான David Longden (43)ம் ஒருவர்.
ஜனவரி 5ஆம் திகதி அவர் தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெறவேண்டிய நிலையில், முதலில் எல்லோருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுவிடுவோம் என அரசு முடிவு செய்ததால், Longdenஆல் தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் 8ஆம் திகதி Longdenக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இப்போது அவர் தன்னைத்தான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
முதல் தடுப்பூசி போட்டும், இரண்டாவது தடுப்பூசி போட அரசு தாமதித்ததால் தனக்கு கொரோனா தொற்றியுள்ளதை அடுத்து Longden வருத்தமடைந்துள்ளார்.
அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றுபவரான Longden, முதல் கொரோனா அலையின்போது தங்களுக்கு அரசு முறையான பாதுகாப்பு உடை தராததால் அபாய நிலையில் பணி செய்தோம், இப்போது 95 சதவிகிதம் பாதுகாப்பானது என கூறப்பட்ட தடுப்பூசி போட்டும் தாங்கள் முழுமையாக பாதுகாப்பாக இல்லை என்றும், இது ஒரு இரட்டை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் என்றும் கூறுகிறார்.