அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண்ணை கொலை செய்து அவரது வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண் ஒருவருக்கு அமெரிக்காவில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடைசி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தால் ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்டியானா சிறையில் லிசா மொன்ட்கொமரி என்ற அந்தப் பெண்ணுக்கு விச ஊசி செலுத்தப்பட்டது.
சிறுவயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதால் இந்தக் கைதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் 52 வயதான இந்தப் பெண் 2004ஆம் ஆண்டு கர்ப்பிணிப் பெண் ஒருவரை கழுத்தை நெரித்துக் கொன்று அவரது வயிற்றைக் கிழித்து குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.
கடந்த 67 ஆண்டுகளில் அமெரிக்க மத்திய அரசினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் பெண்ணாக மொன்ட்கொமரி இடம்பெற்றுள்ளார்.
மரண தண்டை நிறைவேற்றப்படும் முன் கடைசியாக ஏதாவது கூற வேண்டுமா என்று கேட்டதற்கு அவர் ‘ஒன்றுமில்லை’ என்று குறிப்பிட்டதாக அந்த நிகழ்வை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.