Loading...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து நடத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எழுமாற்றான சோதனையிலேயே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களிற்கு செல்பவர்கள் மீது எழுமாற்றான துரித அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, இராமகிருஷ்ண வீதி பகுதியில் இருந்து தூர இடங்களிற்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள், அதில் பயணிப்பவர்களிற்கு அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
Loading...
இதில் யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து நடத்துனர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
அத்துடன், மட்டக்களப்பிற்கு செல்லும் பேருந்தில் பயணித்த பயணியொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
Loading...