இந்தோனேசியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
தடுப்பூசி திட்டத்தின் முதல் நபராக ஜனாதிபதி ஜோகோ விடோடோ, நேற்று (புதன்கிழமை) தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
தடுப்பூசிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், ஜனாதிபதி ஜோகோ விடோடோ, தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் துறையினர், மருத்துவத் துறை அதிகாரிகள், மதவிவகாரக் சபை செயலர் ஆகியோர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
சீனாவின் சைனோவாக் நிறுவனத்தின் அந்தத் தடுப்பூசி, சுகாதாரத் துறை பணியாளர்கள், அரசாங்க ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு அடுத்த மாதம் முதல் செலுத்தப்படவுள்ளது.
இந்தோனேசியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டு இலட்சத்து 58ஆயிரத்து 043பேர் பாதிக்கப்பட்டதோடு, 24ஆயிரத்து 951பேர் உயிரிழந்துள்ளனர்.