தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்து இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதிமுக அமைப்பின் பொது செயலாளராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அமைப்பின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தெரிவானதை தொடர்ந்து, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் மற்றும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் வி.கே.சசிகலா முதலமைச்சராக வரவேண்டும் என பகிரங்கமாக விருப்பம் வெளியிட்டனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வி.கே.சசிகலாவை இன்று சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
எனினும், இன்று மாலை தனது இராஜினாமா கடிதத்தை வி.கே.சசிகலாவிடம் கையளித்துள்ளதாக இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசியலில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, சுவாதி படுகொலை வழக்கு மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பல்வேறு பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்த தமிழச்சியும் இந்த விடயம் தொடர்பில் முகபுத்தகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.