Loading...
தேன் முகம் மற்றும் சருமத்துக்கு நன்மை தரக்கூடியது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.
இது முகப்பரு, மந்தமான தோற்றம், வறண்ட சருமம்,சீரற்ற சரும போன்ற பிரச்சனைகளுக்கு உதவக்கூடும்.
Loading...
அந்தவகையில் தேனை எப்படியெல்லாம் சருமத்துக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
- 2 டீஸ்பூன் தேனை எடுத்து எலுமிச்சைச்சாறு கலந்து நன்றாக மென்மையாகும் வரை கலக்கவும். முகத்தை இலேசாக சுத்தம் செய்து உலர விட்டு முகம் முழுக்க தடவி விடவும். கண்களின் கீழ் வைக்க வேண்டாம். இதை 20 நிமிடங்கள் வைத்து பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். வாரத்துக்கு ஒரு முறை இதை செய்துவந்தால் எண்ணெய் சருமம் நீங்கும்.
- இலவங்கப்பட்டையை பொடித்து ஒரு டீஸ்பூன் தேனில் 3 சிட்டிகை கலந்து முகப்பரு இருக்கும் இடத்தில் மட்டும் வைக்கலாம். முகப்பருவால் வடுக்கள் வந்த இடத்திலும் தடவலாம். பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுத்தால் வடுக்கள் நீங்கும் வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்யலாம்.
- நன்றாக பழுத்த தக்காளியை மசித்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து கட்டியில்லாமல் மீண்டும் பிளெண்டரில் மசித்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். வாரத்துக்கு இரண்டு முறையாவது இதை செய்துவரலாம்.
- வாழைப்பழத்தை மசித்து அதில் தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். முகத்தை சற்று வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கறைகள் போகும் வரை வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் வரை செய்யலாம்.
- மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன் ,தேன் – 2 டீஸ்பூன்,தயிர் – 3 டீஸ்பூன் இந்த மூன்றையும் மென்மையாக ஆகும் வரை நன்றாக கலக்கவும். முகத்தை இலேசாக சுத்தப்படுத்தி பிறகு இதை முகத்தில் தடவி முகத்தை உலரவைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை உலர வைக்கவும். வாரத்தில் இரண்டு நாட்கள் கூட நீங்கள் செய்யலாம்.
- தேன் – 1 டீஸ்பூன் , ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன் இரண்டும் மென்மையாக ஆகும் வரை கலக்கவும். பிறகு அடுப்பில் மிதமான சூட்டில் டபுள் பாயிலிங் மெத்தட் முறையில் சூடேற்றி முகத்தில் மசாஜ் போன்று கீழிருந்து மேலாக தடவி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பிறகு முகத்தை கழுவி எடுக்கவும். சருமத்துளைகள் திறந்தபடி இருந்தால் வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்யலாம்.
- சருமம் எரிச்சலை உணர்ந்தால் இனிமையாக வைத்திருக்க தயிருடன் தேன் சேர்க்கவும். இரண்டையும் க்ரீம் பதத்துக்கு வரும்படி குழைத்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும். வாரம் ஒரு முறை இதை செய்துவரலாம்.
- தேன் உடன் சர்க்கரை சில துளி ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் வட்ட வடிவ இயக்கங்களில் சருமத்தில் தேய்க்கவும். அதிக நேரம் இல்லாமல் 5 நிமிடங்களில் வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். வாரத்துக்கு 2 அல்லது மூன்று வரை இதை செய்யலாம்.
Loading...