சில தினங்களுக்கு கேபி பிக்பாஸ் வீட்டிலிருந்து பணத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறிய நிலையில், இன்று ரம்யா பாண்டியன் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பிரபல ரிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரியல்லா, ஆஜித், சுசித்ரா, ரேகா, அர்ச்சனா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர்.
இதில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா, ஆஜீத் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் ஷிவானி வெளியேற்றப்பட்டார். 5 லட்சம் பணத்தோடு சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினார் கேப்ரியல்லா.
இந்நிலையில் தற்போது ஆரி, பாலா, சோம், ரியோ மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய 5 பேரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களாக வீட்டில் உள்ளனர்.
இந்நிலையில் முதல் மூன்று இடங்களில் ஏதாவது ஓரிடம் நிச்சயமாக ரம்யா பாண்டியனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் ’சைலண்ட் கில்லர்’ என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது
இதற்கிடையே பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யா பாண்டியன் ’எவிக்ட்’ செய்யப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைக் கேட்ட ரம்யா ஆர்மியினர் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.