லண்டனில் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்து, அவர்களின் அந்தரங்க படங்களை இணையத்தில் பதிவேற்றிவந்த நபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின், கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள ஹாக்னியைச் சேர்ந்தவர் 40 வயதான ஆபிரகாம் பெர்கர்.
அவர் கடந்த ஆண்டு 10 வயதுக்கு உட்பட்ட ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, சிறுவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டதற்காக, முதன்முதலில் ஆகஸ்ட் 2020ல் மெட்ரோபொலிட்டனின் ஆன்லைன் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பிரிவின் துப்பறியும் நபர்களால் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் விசாரணையில் பெர்கரின் உண்மையான முழு சுயரூபமும் வெளிவந்தது.
பெர்கர், சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து விவாதிக்கும் சமூக வலைதள குழுவில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். அதில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அநாகரீகமான படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அந்த குழுவில் பெர்கர் இதுபோன்ற பல குழைந்தைகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளது தெரியவந்தது. அவற்றில் பல வீடியோக்களில் ஒரே அந்த சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
மேலும், அவரது மொபைல் ஆய்வு செய்யப்பட்டபோது, அதில் கிட்டத்தட்ட 1,600 தனித்துவமான சிறுவர் துஷ்பிரயோக படங்கள் மற்றும் 127 வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், மிக தீவிரமான A கிரேடு முதல் C கிரேடு வரையிலான வீடியோக்கள் அடங்கும்.
அதில் பல வீடியோக்களில் ‘First Generation’ எனப்படும் வேறு நாட்டில் பிறந்த குழந்தைகளை பெர்கர் பாயியல் குற்றங்களில் ஈடுபடுத்தியுள்ளார்.
காவல்துறை விசாரணையில் இருந்த பெர்கர், கடந்த அக்டோபர் மாதம் இரண்டு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்கான குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கில் கடந்த ஜனவரி 14-ஆம் திகதி தீர்ப்பு வந்தது. அதில் பேர்கருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் தனது உரிமங்களை பெறுவதற்காக கூடுதலாக 4 ஆண்டுகள் சிறையில் கழிக்கவேண்டும். மேலும் அவரை மீது SHPO எனும் காலவரையற்ற பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.