கத்திரிக்காய் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சிறந்த காய்கறி வகையைச் சேர்ந்தது. ஊட்டச்சது நிபுணர்கள் கூட இந்த கத்திரிக்காயை தங்களின் அன்றாட உணவில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
கத்திரிக்காயில் ஏராளமான விட்டமின்கள், கனிமங்கள், நார்ச்சத்துக்கள், நாசுனின் மற்றும் க்லோரோஜெனிக் அமிலம் போன்ற நமது உடலுக்கு ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
கத்தரிக்காயின் சதையில் அதிக அளவிலான அந்தோசியனின்கள் உள்ளது. எனவே ஆய்வின் முடிவில், கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், புற்றுநோய், முதுமை, வீக்கம் மற்றும் நரம்பியல் நோய்கள் போன்ற இதர பல நோய்களையும் தடுக்கிறது என்று கூறப்படுகிறது.
எனவே நாம் கத்திரிக்காயை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால், நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கத்திரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
* கத்தரிக்காயில் இருக்கும் விட்டமின் K மற்றும் ஃபிளாவொனாய்டுகள் நமது உடம்பில் ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுத்து, ரத்தம் உறைதப் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
* கத்தரிக்காயை வறுக்காமல், எப்போதும் நன்றாக சமைத்து சாப்பிட்டால், அது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, அதிக உடல் பருமன் வராமல் தடுக்கிறது.
* கத்தரிக்காயில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் இருப்பதால், இது நமது உடலின் செரிமான மண்டலத்தை சீராக்குவதோடு, நன்றாக பாதுகாக்கிறது.
* கத்திரிக்காயை நாம் வழக்கமாக சமைத்து சாப்பிட்டு வருவதால், இதில் உள்ள ஊட்டச்சத்துகள் நம்முடைய மூளையின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
* கத்திரிக்காயில் இருக்கும் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் எளிதில் கரையக்கூடிய நார் சத்துக்கள் நம்முடைய ரத்தத்தின் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்தி, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.