மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பெய்த கடுமையான அடை மழை காரணமாக விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவிசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அடைமழை காரணமாக 4944 விவசாயிகளின் 13568.75 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் கே.ஜெகநாத் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் களுவாஞ்சிக்குடி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 158 விவசாயிகளின் 308 ஏக்கரும், கொக்கட்டிச்சோலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 443 விவசாயிகளின் 1400.5 ஏக்கரும், வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 6 விவசாயிகளின் 15 ஏக்கரும், பழுகாமம் கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 94 விவசாயிகளின் 238.25 ஏக்கரும், ஆரையம்பதி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 61 விவசாயிகளின் 149.5 ஏக்கரும், கல்லடி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 137 விவசாயிகளின் 510.5 ஏக்கரும், மண்டபத்தடி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 1094 விவசாயிகளின் 3615.5 ஏக்கரும், நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.
மேலும் ஆயித்தியமலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 112 விவசாயிகளின் 310.75 ஏக்கரும், கரடியனாறு கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 386 விவசாயிகளின் 1462 ஏக்கரும், ஏறாவூர் கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 181 விவசாயிகளின் 513 ஏக்கரும், வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 35 விவசாயிகளின் 121.25 ஏக்கரும், கிரான் கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 1152 விவசாயிகளின் 2437 ஏக்கரும், தாந்தாமலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 8 விவசாயிகளின் 35 ஏக்கரும், வாகரை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 750 விவசாயிகளின் 1362.75 ஏக்கரும், வாழைச்சேனை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட327 விவசாயிகளின் 1089.75 ஏக்கரும், பாதிப்படைந்துள்ளன.
இது தொடர்பில்கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் பூரணமான தகவல்கள் அல்ல எனவும், பெய்து வரும் அடை மழை காரணமாகவும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பூரணமான தகவல்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக ஆய்வுக்குழு தமது பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
