சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவலை நம்பாத, ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கும்பல் ஒன்று, மாஸ்க் அணிவது தொடர்பில் மீண்டும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதிக சுற்றுலாத்தலங்கள் கொண்ட நாடு என்பதால், உருமாறிய புதிய கொரோனா பரவல் அச்சமும் சுகாதாரத்துறையை நெருக்கடிக்கு உள்ளாக வைத்துள்ளது.
மட்டுமின்றி தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஒவ்வொரு மண்டலம் தோறும் முன்னெடுக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிரான கும்பல் ஒன்று, மாஸ்க் அணிவதற்கு எதிராக சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஊரடங்கு அமுலில் இருக்கும் காலகட்டம் என்பதால் பொதுவெளியில் 5 பேர்களுக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
பெர்ன் நகரில் சில கடைகளில் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மாஸ்க் அணிய மறுப்பது, அவர்களின் ஆர்ப்பாட்டத் திட்டமாக உள்ளது.
ஒரு மணி நேரத்தில் திறந்திருக்கும் சில கடைகளில் புந்து அணிந்திருக்கும் மாஸ்க் அப்புறப்படுத்துவதே இவர்களின் நோக்கம்.
ஆனால் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பொலிசாருக்கு எழுந்துள்ள சிக்கல், இதில் யார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர், யார் சாதாரண மக்கள் என்பதே.
இருப்பினும் தேவை ஏற்பட்டால், பொதுமக்களுக்கு விலக்கு ஏற்படுத்தவும் பொலிசார் திட்டமிட்டு வருகின்றனர்.