சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இவருக்கு இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்லப்பட்டுள்ல நிலையில் அவற்றின் முடிவுக்காக காத்திருப்ப்பதாக மேலும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பவித்திரா வன்னியாராய்ச்சி கொரோனா விடயத்தில் மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்லானமை தெரிந்ததே. குறிப்பாக நாட்டில் இன்னமும் சமூகத்தொற்று ஏற்படவில்லை என்பதை ஆணித்தனமாக கூறிவந்தவர்தான் பவித்திரா.
மேலும் நாடாளுமன்றில் முகக்கவசம் அணியாமல் உரையாற்றியபோது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் விமர்சிக்கப்பட்டார். நாடாளுமன்றில் தான் சமூக இடைவெளியை பேணவேண்டிய தேவை இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியமைக்காக பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களால் விமர்சிக்கப்பட்டார்.
அதுமட்டுமன்றி கொரோனா நோய் இலங்கையிலிருந்து போகவேண்டும் என்பதற்காக புனித நீரை ஆற்றில் ஊற்றியமைக்காகவும் தம்பிக்கவின் பாணி மருந்தைக் குடித்துக்காட்டியமைக்காகவும் வெகுவாக விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.