Loading...
சிங்கப்பூரில் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவை மீறி வெளியில் சென்றதால் நூருல் அஃபிகா முகம்மது (22) என்ற தாதிக்கு நீதிமன்றம் நேற்று ஏழு வாரச் சிறைத்தண்டனை விதித்தது.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வந்தபின் மார்ச் 21 முதல் ஏப்ரல் 4 வரை 14 நாள்களுக்கு அவர் வீட்டிலேயே இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Loading...
ஆனால், அதைமீறி ‘பபல் டீ’ வாங்க, தோழிக்குத் திருமண ஏற்பாடுகளில் உதவ என்று குறைந்தது 7 முறை அவர் வெளியில் சென்றதாகக் கூறப்பட்டது.
தன் மீதான மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்ட நிலையில், தண்டனை விதிக்குமுன் அவர் மீதான மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
Loading...