இந்தியாவின் சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் தயாரித்துள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்-எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் 500,000 இலவச மருந்துகள் இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
இந்திய குடியரசு தினத்தை குறிக்கும் வகையில் இது ஜனவரி 26 ஆம் திகதி அதாவது அடுத்த வார ஆரம்பத்தில் இலங்கையின் சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தைத் தொடர்ந்து இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், கடந்த வெள்ளிக்கிழமை அற்கான அனுமதியை வழங்கியது.
இந்தநிலையில் சீரம் நிறுவனம் இந்த ஆண்டு இரண்டு பில்லியன் தடுப்பூசி குப்பிகளை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஏனைய தடுப்பூசிகளின் உலகளாவிய தேவைகளில் 40 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.