ஹோமாகமசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் நடைபெற்ற இரண்டு திருமணங்களில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருமண ஜோடியொன்று கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளது. மற்றொரு ஜோடி சுயதனிமைப்பட்டுள்ளது.
நேற்று (24) சுமார் 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடுவெல, ரணல பகுதியில் நடைபெற்ற திருமண ஜோடி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது. ஹோமாகம பிட்டிபன பகுதியில் நடந்த திருமண ஜோடி தனிமைப்பட்டுள்ளனர்.
கடுவெல, ரணல பகுதியில் திருமண மண்டபத்தில் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. பாதுக பகுதியில் இரண்டாம் நாள், திருமணம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். பின்னர் தம்பதியினர் தங்கள் தேனிலவுக்கு நுவரெலியாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்.
ஒவ்வாமை காரணமாக தம்பதியினருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தம்பதியினர் நேற்று முன்தினம் (23) கொரோனா வைரஸ் பாதித்தது உறுதியானது.
அவர்கள் நுவரெலியாவிலுள்ள சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட, 325 சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மற்றைய திருமணத்தில், கொரோனா தொற்றாளர் கலந்து கொண்டதால், அந்த ஜோடி தனிமைப்பட்டுள்ளது.