Loading...
வவுனியா ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அலுவலகத்தில் நேற்று இருவருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் அமைந்துள்ள, வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கு. திலீபனின் அலுவலகத்தில் இந்த மோதல் இடம்பெற்றது.
Loading...
ஒருங்கிணைப்புகுழு அலுவலகத்துடன் தொடர்புடைய, ஈ.பி.டி.பி உறுப்பினர்களே கைகலப்பில் ஈடுபட்டனர்.
நேற்று காலை, பல்வேறு தேவைகளிற்காக மக்கள் அதிகமாக அங்கு கூடியிருந்த போது, இருந்த போதே இருவருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டதை மக்கள் வேடிக்கை பார்த்தனர்.
Loading...