நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிட்டதட்ட 350 கிரொண்ட் நிலம் கோவிலை சுற்றி இருந்தது. இப்பொழுது கோவிலுக்கு சொந்தமாக 93 கிரொண்ட் நிலம் மட்டுமே உள்ளது.
கோவில் பரம்பரை அறங்காவலர் செக்ஷன் 34 படி ஆணையர் அனுமதி பெறாமல் 138 கிரொண்ட் நிலத்தை நகர வாடகைதாரர் பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி விற்று விட்டார். மீதியுள்ள நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் அரசாங்க கையகப்படுத்த தினால் இப்பொழுது கோவில் நிர்வாகத்திடம் இல்லை.
ஸ்ரீநிவாசன் என்பவர் கோவிலுக்கு சொந்தமான 15 கிரொண்ட் நிலத்தை குத்தகை எடுத்து பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். பிறகு நகர வாடகைதாரர் பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி அந்த நிலத்தை கைப்பற்றியுள்ளார்.
ஆனால் நிலத்திற்கான பணத்தை அவர் செலுத்த தவறியதால் கோவில் நிர்வாகம் நிலத்தை கேட்டு வழக்கு தொடுத்தது. 2007 ஆம் ஆண்டு நீதிமன்றம் நிலம் கோவிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பளித்தும், சீனிவாசன் நிலத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
அறநிலைத்துறையும் இவருக்கு சாதகமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, பின்பு ஸ்ரீநிவாசன் கோவில் நிலத்தில் இருந்த பள்ளி கூடத்தை மூடி அதை வணிக வளாகமாக மாற்றி அருகில் உள்ள மசூதிக்கு வருபவர்களுக்கு பார்க்கிங் வசதி செய்து சம்பாதித்து வந்துள்ளார்.
மேலும் 2010 ஆம் ஆண்டு இந்த கோவில் நிலத்தை காண்பித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 69 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் சொத்துக்களை மீட்க தியாகி நெல்லை ஜெபமணியின் மகனான மோகன் ராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அவர் வாதத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் செக்க்ஷன் 34 புறப்பாக விற்பனை செய்யப்பட்ட சொத்துக்களை மீட்க அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து அறநிலையத்துறை நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் சொத்தை மீட்க நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.
சுமார் 170 கோடி மதிப்புள்ள நுங்கம்பாக்கம் அகதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 15 கிரவுண்ட் நிலம் மோகன் ராஜ் என்கிற நபரின் முயற்சியால் மீட்கபட்டுள்ளது.
அகதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆயிரம் கோடிக்கு மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்படாமல் ஆக்கிரமிப்பில் தான் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அகதீஸ்வரம் கோவில் நிலமீட்பு வழக்கில் முக்கியமானவர் பெரியவர் அவர் நெல்லை ஜெபமணி எனும் தியாகியின் ஒரே வாரிசு மோகன் ராஜ்,
மோகன் ராஜ் காவல்த்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர், இவர் காவல் துறை பணியில் இருந்த போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, சாந்தன் உள்ளிட்ட பலரை கைது செய்ததில் முக்கிய பங்காற்றியவர்.
சுமார் 170 கோடி மதிப்புள்ள சென்னை அகதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 15 கிரவுண்ட் நிலத்தை மேட்டு கொடுத்த மோகன் ராஜ் அவர்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருவது குறிப்படத்தக்கது.
மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .