ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
Northrop Grumman என்ற நிறுவனம் 2018-ஆண்டு நவம்பரில் ஒரே ராக்கெட்டில் 108 செயற்கைக்கோள்களை விண்னில் செலுத்தி சாதனைப் படைத்தது.
ஆனால் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பி அந்த சாதனையை முறியடித்துள்ளது.
புளோரிடாவில் உள்ள Cape Canaveral Space Force Stationலிருந்து ஜனவரி 24 (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு (EST) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரு புதிய ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.
பால்கன்-9′ எனும் இந்த ராக்கெட், ஸ்பேஸ்எக்ஸின் புதிய ஸ்மால்சாட் ரைட்ஷேர் திட்டத்தின் (SmallSat rideshare programme) ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட முதல் பணி ஆகும்.
வணிகரீதியாகவும் அரசு தொடர்பாகவும் செலுத்தப்பட்ட ‘பால்கன்-9’ ராக்கெட்டில் உள்ள 143 செயற்கைக்கோள்களில் 17 சிறிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள், 48 எர்த்-இமேஜிங் செயற்கைக்கோள்கள் மற்றும் 30 சிறிய செயற்கை கோள்கள் இடம்பெற்றன.
இவை அனைத்தும் வெற்றிகரமாக விண்ணில் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட்டது.
இந்த ரைட்ஷேர் ராக்கெட் திட்டத்தில் 200 கிலோ எடை கொண்ட ஒரு செயற்கை கோளுக்கு ஒரு மில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய நிறுவனம் என்ற பெயரையும் Space X நிறுவனம் பெற்றுள்ளது.