கொரோனா வைரஸ் தொற்றுநோயை சரியாக கையாளவில்லை என விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
இத்தாலியில் கொரோனா தோற்றால் இதுவரை 2,475,372 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 85,881 பேர் இறந்துள்ளனர்.
85,000க்கும் அதிகமானோர் இறந்ததையடுத்து, இந்த சூழ்நிலைக்கு பிரதமர் கியூசெப் கோன்டேவின் அரசாங்கம் தகுந்தபடி செயல்படாதது தான் காரணம் என குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுந்தது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா மீட்புப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 750 பில்லியன் யூரோக்களில், 209 பில்லியன் யூரோக்களை இத்தாலிக்கு மட்டும் பயன்படுத்துவதாக இருந்த அவரது திட்டத்துக்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனைத் தொடர்ந்து, கோவிட் செலவினம் தொடர்பாக இத்தாலியில் அரசியல் நெருக்கடி வெடித்துள்ளது.
இதனால், செனட்டில் தனது பெரும்பான்மையை இழந்த நிலையில், கியூசெப் கோன்டே இன்று காலை ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளார்.
இதன்முலம் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதியால் ஒரு ஆணை வழங்கப்படும் என்று அவர் நம்புகிறார்.
இவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் இத்தாலியில் புதிய தேர்தல் நடத்தப்பட்ட வாய்ப்புள்ளது.