வடக்கு மாகாணத்தில் இன்றும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் இன்று 758 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் வடக்கைச் சேர்ந்த 08 பேர் உட்பட 12 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் 5 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர், வவுனியா மாவட்டத்தில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் ஒருவர் என வடக்கில் 08 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ள வெளி மாகாணங்களைச் சேர்ந்த 04 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” – என்றார்.