Loading...
பௌத்த கோட்பாடுகளுக்கு அமைய சமூகத்தை வழிநடத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சட்டம், நீதிமன்றங்கள், அரசியல் யாப்பு ஆகியவற்றின் மூலம் மாத்திரம் நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியாதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Loading...
பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பௌத்த விஹாரைகளுக்கு அபிவிருத்தி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. விகாரைகளைப் புனரமைப்பு செய்வதற்காக 10 கோடி ரூபாவுக்கு மேலான தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...