திரிபுராவில் நேற்று பகல் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், தலாய் மாவட்டத்தில் 28 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வீடுகள் மற்றும் வர்த்தக கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். அகர்தலாவில் உள்ள ஒரு பள்ளிக்கூட மாணவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட போது வகுப்பறையில் இருந்து ஓடினர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாநிலத்தின் சில இடங்களில் வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. கமல்பூர் நடுன்பகன் என்ற இடத்தில் நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த 50 வயது பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.