தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட வளர்ப்பு தந்தையால், தாயும், மகளும் எய்ட்ஸ் வியாதிக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் வன்னிவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது கணவனை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்த அஞ்சலி என்ற பெண்ணுடன் ராமமூர்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் ராமமூர்த்தி அந்த பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு அதே வீட்டில் குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்த விவகாரத்தினால் பெண்ணின் உறவினர்கள் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளனர். அதனால் ராமமூர்த்தி அஞ்சலியையும், இரண்டு பெண் பிள்ளைகளையும் சொந்த ஊரான வன்னிவேலம்பட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், அஞ்சலியின் இரண்டாவது மகளான 13 வயது சிறுமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் சிறுமியை மருத்துவமனைக்கு கொன்று சென்றனர். அங்கு பரிசோதித்ததில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன அஞ்சலி, அதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தார். அப்போது கர்ப்பத்துக்கு காரணம் வளர்ப்பு தந்தை ராமமூர்த்திதான் என்று கூறியுள்ளார்.
இது குறித்த விசாரணையில், அஞ்சலி வீட்டில் இல்லாத நேரங்களில் சிறுமியை வலுக்கட்டாயமாக துஷ்பிரயோகம் செய்து வந்த ராமமூர்த்தி, சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து ராமமூர்த்தியை பொலிசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் கர்ப்பமான சிறுமியின் ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் அவருக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ந்து போன மருத்துவர்கள், ராமமூர்த்தி மற்றும் தாய் அஞ்சலியின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தனர். அதில் அவர்களுக்கும் எய்ட்ஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.