Loading...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் ஹிக்கடுவ பகுதியில் உள்ள ஒரு இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவந்தார்.
Loading...
இந்நிலையிலேயே, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் உடல்நலம் நன்றாக இருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...