வரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை இலங்கை உறுதியுடன் எதிர்கொள்ளும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“கடந்த நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை இழந்தது. இதனால் தற்போதைய அரசாங்கம் பல தடைகளை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையில் நிலவும் சூழ்நிலை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் உலகிற்கு இலங்கை பதில் வழங்கும்.
கடந்த அரசாங்கம் 30/1 தீர்மானத்தை அறிமுகப்படுத்தியதாகவும், நாட்டிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாகவும், இராணுவ வீரர்களை தண்டிப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் நேர்மை சர்வதேச சக்திகளுக்கு எதிராக வெற்றிபெறும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் தமிழ்ப்பிரிவினைவாத மோதல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.