Loading...
நானு ஓயா முதல் நுவரெலியா வரை கேபிள் கார் திட்டத்தின் எதிர்கால பணிகள் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக 52 மில்லியன் யூரோ முதலீடு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மையில் நுவரெலியா மாவட்ட வாழ்வாதார மேம்பாட்டுக் குழுவில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
Loading...
தொடர்ந்தும் பேசிய அவர், “6059 புதிய சுற்றுலா தலங்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் 318 நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவை.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே இந்த சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் நுவரெலியாவை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
Loading...