யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த இளைஞன் தப்பிக்க முயன்று பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது வீதியில் குறித்த இளைஞர் வீழ்ந்தபோது அருகே வந்த வாகனம் அவர் மீது மோதியதாலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிய வருகிறது.
விபத்தில் 25 வயதான மயூரன் என்பவர் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது சகோதரனும் விபத்தினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்த இளைஞன் அரியாலை பார்வதி வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த இளைஞர் ஹயஸ் வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.