சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், பின்நாட்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் முறையாக தண்ணீர் அருந்துவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஹைடிரேட்டிங் (hydrating) எனப்படும் நீரேற்றம் உடலில் சரியாக இருந்தால் சிறிய கற்கள் சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடும்.
டி.கே பப்ளிஷிங் வெளியிட்ட ‘Healing Foods’ என்ற புத்தகத்தில், எலுமிச்சை சாறு சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் என கூறப்படுள்ளது. இதில் இருக்கும் அதிகப்படியான சிட்ரிக் அமிலம் படிகங்களால் கற்கள் உருவாவதை தடுக்கிறது. எலுமிச்சை பழச்சாறு அல்லது இனிப்பு அல்லாத எலுமிச்சை சாறு ஆகியவற்றை நாள்தோறும் எடுத்துவந்தால் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு எனக் கூறப்பட்டுள்ளது
சிறிய அளவிலான சிறுநீரக கற்களையும் எலுமிச்சை சாறு அகற்றும் என அவர் தெரிவித்துள்ளார். முறையாக எலுமிச்சை சாறை குடித்து வருபவர்களின் சிறுநீரக கற்கள் 1.00 – லிருந்து 0.13 ஆக குறைத்துள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிரஷ்ஷாக தயாரித்த எலுமிச்சை சாற்றை குடிக்கும்போது கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றும் என்றும், எடைக் குறைப்பை துரிதப்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.