பிரபல நடிகை தனது காதல் கணவரை விவாகரத்து செய்யவுள்ளார்.
பிரபல மலையாள நடிகை ஆன் அகஸ்டீன். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பிஜோய் நம்பியார் இயக்கிய சலோ என்ற ஆந்தாலஜி படம் மூலம் தமிழுக்கும் வந்தார் ஆன் ஆகஸ்டின்.
இவரும் பிரபல ஒளிப்பதிவாளர் ஜோமன் டி. ஜானும் காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
ஜோமன், தமிழில் பிரம்மன், எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில் ஆன் ஆகஸ்டின் – ஜோமன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 9 ஆம் திகதி நடக்க இருக்கிறது.
சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் நடிகர், நடிகைகள் விவாகரத்து செய்வது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நடிகை ஆன் அகஸ்டின்- ஜோமன் விவாகரத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.