சந்தானம், சிம்பு என்ற இருவருக்கும் ஒரு குரு-சிஷ்யன் நட்பு. சந்தானத்தை சின்ன திரையிலிருந்து பெரிய திரைக்கு அறிமுகம் செய்தது சிம்பு. அதனால், அவர் என்றால் சந்தானம் உடனே எதை சொன்னாலும் செய்வார்.
இந்நிலையில் சந்தானம் காமெடியனிலிருந்து ஹீரோவாகி, இப்போ ஆக்சன் ஹீரோவாக மாஸ் ஹீரோவா வருவதற்கு ட்ரை பண்றார். அதற்கு
உறுதுணையாக இருப்பார் என்று தன் படத்துக்கு இசையமைக்க அனிருத்தை கேட்டு, பல மாதங்கள் காத்திருந்தார்.
அங்க ஒரு சிக்கல், சிவகார்த்திகேயன் -அனிருத் நட்பினால், சிவாவை போட்டியாக எண்ணும் சந்தானத்துக்கு பதிலே சொல்லாமல் இருந்தார் அனிருத்.
இதை கேள்விப்பட்ட சிம்பு, நானே இசையமைத்து தருகிறேன் என்று சொல்ல, எல்லாம் சுபம். ஆனால்,’ சிம்பு பத்தி தெரியும். மூட் இருந்தா தான் ஷூட்டிங்குக்கே வருவார். அவர் கிட்ட மாட்டிகிட்டே…இந்த படம், எப்ப இசையமைச்சு, என்ன நடக்கபோகுதோ?’ என்று சந்தானத்துக்கு பேதியாக கொடுத்துக்கொண்டு இருந்த மக்களுக்கு, ஒரு அதிர்ச்சி செய்தி.
சிம்பு தீயா வேலை செஞ்சு…சாரி, காட்டு தீயா வேலை செஞ்சு,சந்தானத்தின் சக்கை போடு போடு ராஜா படத்தின் எல்லா பாடல்களையும் கம்போசிங் பண்ணி முடித்துவிட்டாராம்.ரெக்கார்டிங் போய்க்கொண்டு இருக்கிறது. பாடல்கள் வெளியிட சிம்பு ரெடியாம்.
சிம்பு தான் இசையமைப்பாளர் என்று அறிவித்த 15 நாட்களில் எல்லா பணியும் ஓவர்.
‘இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?’என்று சந்தானம் கேட்க,’படம் ஷூட்டிங் முடிந்து,பிஜிஎம் பாக்கி இருக்கே, அப்ப என்ன மூடு இருக்கும்? அப்ப என்ன மூடு இருக்கும்?’ என்று இன்னும் சந்தானத்தின் தரப்பு பேசுதாம்.
எஸ்டிஆர்…வேலைன்னு நீங்க முடிவு பண்ணிட்டா… வெள்ளைக்காரன்னு காட்டுங்க.