இந்தியா – மியான்மர் எல்லையில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருணாசலப் பிரதேசம் மாநிலத்திலும் உணரப்பட்டது.
திரிபுரா மாநிலத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை 00.19 மணியளவில் இந்தியா- மியான்மர் எல்லைப்பகுதியியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரில் உள்ள காலே என்ற இடத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் பூமியில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 ஆக பதிவானது.
இன்றைய நிலநடுக்கத்தால் அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் குருங் குமே மாவட்டமும் அதிர்ந்தது. இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுக்கோலில் 4.3 ஆக பதிவானது.