வவுனியா பொது வைத்தியசாலையில் புத்தாண்டு தினமான கடந்த முதலாம் திகதியன்று ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
நேற்றுமுன்தினம் மாலை இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாகவும், நேற்றைய தினம் மற்றொரு பிள்ளையும் இறந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,
புத்தாண்டு தினத்தில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. இவ் குழந்தைகளின் நிறை குறைவாக காணப்பட்டமையினால் சிறுவர் (குழந்தை) சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளும் உயிரிழந்துள்ளன.
குழந்தைகளின் நிறை 600 கிராம் மற்றும் 550 கிராமாக காணப்பட்டன. பொதுவாக 8 கிலோகிராமிற்கு குறைந்த குழந்தைகள் உயிர் பிழைப்பது அரிது எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.