முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருவித பயம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது, இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு கோத்தபாய இடையூறு விளைவித்துள்ளார். இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் சமாதானம் தொடர்பாக சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேசிக் கொண்டிருந்தனர். இதன்போது அந்த இடத்திற்கு கோத்தபாய வருவதை அறிந்து கொண்ட மஹிந்த பதற்றமடைந்தார்.
கோத்தபாய வருகிறார் தற்போது நீங்கள் செல்லுங்கள் என, தன்னுடன் உரையாடிய சமாதான விரும்பிகளை மஹிந்த அனுப்பி வைத்தார் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை அலுத்கம, தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிற்கமைய மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.