கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘துருவங்கள் 16’. ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார்.
கிரைம் திரில்லராக வெளியான இப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தின் புதுமையான திரைக்கதை, எடிட்டிங் ஆகியவற்றைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘துருவங்கள் 16’ படக்குழுவினரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் ” ‘துருவங்கள் 16’ தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாக எடுக்கப்பட்ட வலுவான திரைப்படம். ரகுமான், கார்த்திக் நரேன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.
தமிழின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இளம் நாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனும் ‘துருவங்கள் 16’ படக்குழுவினரைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.