சவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமண வாழ்வு விவாகரத்தில் முடிய அவரின் கோபம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தான் நான்கு ஆண்டுகளாக காதலித்த அஷ்வின் ராம்குமாரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார்.
இந்நிலையில் அவர் கணவரை பிரிந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சவுந்தர்யாவின் திருமண வாழ்க்கை இப்படி பாதியிலேயே முடிய அவரின் கோபம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. எதற்கெடுத்தாலும் கோபப்படுவாராம்.
அஷ்வின் ராம்குமார் மிகவும் பொறுமையானவராம். ஆனால் சவுந்தர்யா அதற்கு நேர் எதிர். அஷ்வினின் குடும்பத்தார் மீதும் அவ்வப்போது கோபப்படுவாராம். இது அஷ்வினுக்கு பிடிக்கவில்லையாம்.
எவ்வளவு தான் பொறுத்துப் போவது இந்த சவுந்தர்யா மாறமாட்டார் என்ற முடிவுக்கே வந்துவிட்டாராம் அஷ்வின். படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி போன்று ஓவராக கோபப்பட்டு வாழ்க்கையை கெடுத்துக் கொண்டுள்ளார் சவுந்தர்யா.
சவுந்தர்யா, அஷ்வினை சேர்த்து வைக்க ரஜினி உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் சவுந்தர்யா தான் முடியாது என்று பிடிவாதமாக இருந்துவிட்டாராம்.