லண்டனில் உள்ள பூங்காவில் பட்டப்பகலில் 14 வயது துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ilfordல் உள்ள Goodmayes பூங்காவில் தான் இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் நடந்துள்ளது.
அங்கு 14 வயது சிறுமி ஜாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் சிறுமியை கட்டாயப்படுத்தி புதருக்குள் இழுத்து சென்றார்.
பின்னர் சிறுமியை அவர் துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடினார்.
அந்த மர்ம நபரின் வயது 17ல் இருந்து 20க்குள் இருக்கும் எனவும், மெலிதான் மீசை முகத்தில் இருக்கும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் யாரும் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து டிடெக்டிவ் அதிகாரி Gemma Morris கூறுகையில், சம்பவம் நடந்த பூங்காவில் எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும்.
எனவே இது தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் கூறுங்கள்.
உங்கள் தகவல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது எங்கள் விசாரணைக்கு உதவக்கூடும் என கூறியுள்ளார்.