கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 104 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 2.27 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.
கோவிட்-19 என்பது கொரோனா வைரஸின் ஒரு வகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
COVID-19 தொற்றை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்கள் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன, அவற்றில் சில உருமாற்றம் அடைந்து மேலும் பல வைரஸ் பிறழ்வாக இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பிரித்தானிய, தென்னாப்பிரிக்க மற்றும் பிரேசிலிய வகைகள் என அழைக்கப்படுபவை அடங்கும்.
இந்நிலையில், உலகம் முழுவதும் இப்போது கிட்டத்தட்ட 4,000 வகை கொரோனா வைரஸ்கள் இருப்பதாக பிரித்தானிய தடுப்பூசி விநியோக அமைச்சர் நதிம் ஜஹாவி தெரிவித்துள்ளார்.
அதனால் தான் ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா உள்ளட்ட உலகின் அனைத்து மருந்து நிறுவனங்களும் அனைத்து வகை கொரோனா வைரஸ்களுக்கும் எதிராக செயல்படக்கூடிய மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.