தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நித்யா மேனன். இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக வளர்ந்து விட்டார்.
சமீபகாலமாக அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. இதற்கு ஏற்ப படவாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் பெரிதாக பேசப்படாமல் இருக்கும் நித்யா மேனன் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
சமீபத்தில், நித்யா மேனன் தனது உடல் எடையை பெருமளவு குறைத்து ஸ்லிம்மாக மாறி தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
இந்நிலையில், நடிகை நித்யா மேனன் தனது காதல் முறிவை பற்றி முதன் முறையாக மனம் திறந்து பேசி இருக்கும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதில், நித்யா மேனன் “தன்னுடைய முதல் காதல் தோல்வியில் முடிந்ததாகவும், அதற்குப் பிறகு ஆண்களை கொஞ்ச நாள் வெறுத்ததாகவும், இனி காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்திருக்கிறாராம்.
இதனைத் தொடர்ந்து நித்யாமேனன், ‘யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது. எனக்கு பிடித்த மாதிரி தான் நான் வாழ்வேன்’ என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி இருக்கிறார்.