குடும்பச் சுமை கூடும் நாள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளியூர் பயணமொன்றால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். கையிருப்புகள் கரைய நேரிடலாம்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். எதிர்பாராத தனவரவு உண்டு.உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும்.நேற்றைய வரவை இன்று பொருளாக மாற்றுவீர்கள்.
சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள். மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிட்டும். வியாபாரப் போட்டிகள் அகலும்.
யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். இதைச் செய்வோமா? அதைச் செய்வோமா? என்ற குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளில் கொஞ்சம் தாமதமும் உருவாகும்.
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிட்டும் நாள். தனவரவு திருப்திதரும். வருங்காலக் கனவுகளை நனவாக்க பயணமொன்றை மேற்கொள்வீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். எதிரிகள் விலகுவர். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.
சொத்துக்களால் ஆதாயம்கிடைக்கும் நாள். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.
மங்கலச் செய்திகள் மனைதேடி வந்து சேரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். புதியவர்களின் சந்திப்பு கிட்டும்.
வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும் நாள். சகோதர வழியில் விரயங்கள் அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகள் கூடும். வாகன மாற்றம் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
வருமானம் திருப்தி தரும் நாள். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். புதிய பங்குதாரர்கள் தொழிலில் வந்திணைவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
அலைபேசிவழித் தகவல் அனுகூலம் தரும் நாள். நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்களின் சந்திப்பு கிட்டும். பிள்ளைகளால் சிறு விரயம் உண்டு.