பைரவா படத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து உள்ளனர். இது விஜய்க்கு 60-வது படம் ஆகும். ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சரத் லோகித்சவா, ஹரிஷ் உத்தமன், சதீஷ் ஆகியோரும் இந்த படத்தில் உள்ளனர். பரதன் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கியவர். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
மருத்துவ கல்வி பிரச்சினைகளை மையப்படுத்தி அதிரடி கதையம்சத்தில் இந்த படம் தயாராகி உள்ளது. பைரவா படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை பார்த்திபன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். சாந்தனு-பார்வதி நாயர் ஆகியோர் நாயகன்-நாயகியாக நடித்து இருக்கிறார்கள்.
தவறான மனிதர்களுக்குள் நடக்கும் சச்சரவுகளை மையப்படுத்தி திகில் படமாக உருவாகி உள்ளது. ‘புரியாத புதிர்’ படத்தில் விஜய் சேதுபதி-காயத்ரி ஜோடியாக நடித்துள்ளனர். ரஞ்சித் ஜெயக்கொடி டைரக்டு செய்துள்ளார். திகில் படமாக தயாராகி உள்ளது.
‘புரூஸ்லி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ்-கிர்த்தி கர்பந்தா ஜோடியாக நடித்துள்ளனர். பிரசாந்த் பாண்டிராஜ் டைரக்டு செய்துள்ளார். நகைச்சுவையும், அதிரடியும் கலந்த படமாக உருவாக்கி உள்ளனர்.