காதல் பிரிவு அதிக பாசத்தை ஏற்படுத்தும் என்பார்கள். இது உண்மையாக இருந்தாலும் பிரிந்து இருப்பவர்களுக்கு தான் தான் அந்த வலி தெரியும். உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் மாற்று தீர்வு உள்ளது. அதை சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.
ஆண், பெண் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தங்கள் அன்பை பரிமாறி கொண்டாலும், சில சமயங்களில் சிறிய மன கசப்பு பெரிய பிரச்சனையை உண்டாக்கி விடும். பிரச்சனை யார் பக்கம் இருந்தாலும் வலி இருவருக்குமே இருக்கும்.
பிரிந்திருக்கும் காதலில் பெண்கள் தங்களின் காதலரிடம் எதிர்பார்க்கும் சிலவற்றை பற்றி இங்கு பாருங்கள்..
கொஞ்சம் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாலும் ஆண்களுக்கு ஒரு மமதை வந்துவிடும். அவ்வாறு இருக்க கூடாது என பெண்கள் எதிர்பார்கிறார்கள். உண்மை தான் இது சேமிப்பை கரைத்துவிடும். மற்றும் அவப்பெயர் உண்டாக்கிவிடும்.
பெரும்பாலும் ஆண்கள் வெளியூர் சென்றால் தங்களது பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தி கொள்வார்கள். அல்லது அதுவாக கூட சிலருக்கு மாறிவிடும். இதை பெண்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் விரும்பும், விரும்பிய காதலர்கள் அப்படியே இருக்க வேண்டும் என்பார்கள். இன்னொரு வகையில் எங்கே வேறு பெண்ணை விரும்பிவிடுவர்களோ என்ற அச்சமும் இருக்க தான் செய்கிறது.
ஊரில் இருந்து வரும்போது கண்டிப்பாக தனக்காக ஏதேனும் வாங்கி வருகிறீர்களா என்ற ஆசை பெண்களிடத்தில் இருக்கும். கண்டிப்பாக இந்த வகை காதல் கதைகளில் நிறையவே இருக்கும். தங்கம், வைரம் இல்லாவிடினும், தெருவோர கடைகளில் விற்கும் சின்ன சின்ன கம்மல், வளையல்களே அவர்களது ஆசையை திருப்தி செய்துவிடும் என்பதை ஆண்கள் புரிந்துகொண்டால் போதுமானது.
அதே போல, கிடைக்கும் நேரம் எல்லாம் பேச வேண்டும் என்ற ஆசை பெண்களின் மனதில் இருக்கும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவருடன் பேசி மகிழ்விக்க வேண்டியது உங்கள் கடமை.