இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தலைவராக இருந்த நட்சத்திர ஆட்டக்காரர் மகேந்திர சிங் டோனி தனது தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர் வரும் ஜனவரி 15ஆம் திகதி முதல் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. அதன் பிறகு மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி தேர்வு செய்ய தேர்வுக்குழு நாளை மறுநாள் (ஜனவரி 6) கூடும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு டோனி தலைமையில் இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், டோனியின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.