தேவையான பொருட்கள் :
வான் கோழி இறைச்சி – கால் கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பூண்டு பல் – 4
காய்ந்த மிளகாய் – 4
சீரகம் – அரை டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
கறியினை சிறு சிறு துண்டுகாளாக நறுக்கவும். பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றை இலேசாக வறுக்கவும். பிறகு மிக்ஸியில் தக்காளி காய்ந்த மிளகாய், வதக்கிய பொருட்கள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும். பிறகு அரைத்த மசாலவை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின் கறி துண்டுகளை சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். 4 விசில் வந்ததும் இறக்கவும். பின் இறுதியாக உப்பு சேர்த்து பரிமாறவும்.