ஒரு சிலருக்கு பிறக்கும் போது அவர்களின் முகம் மற்றும் உடலில் தழும்புகள், மச்சம், மரு இது போன்றவை இயற்கையாக அமைந்திருக்கும்.
பிறப்பில் ஏற்படும் இது போன்ற தழும்புகள் சிலரின் அழகை கெடுக்கும் வகையில் அமைந்து பெரிய பாதிப்பை கூட ஏற்படுத்தும்.
எனவே இயற்கையான முறையில் இந்த தழும்புகளைக் போக்குவதற்கு சூப்பரான டிப்ஸ் இதோ!
தக்காளிச் சாறு
தக்காளிச் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவு எடுத்து கொண்டு தழும்புகள் இருக்கும் நமது சருமத்தில், தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் விரைவில் மறைந்து, சருமம் பொலிவுடன் இருக்கும்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்க்கு நமது சருமத்தை மென்மையாக்கும் தன்மை உள்ளது. எனவே இந்த ஆலிவ் எண்ணெயைக் கொண்டு தினமும் 10 நிமிடங்கள் தழும்பு இருக்கும் பகுதியில் மசாஜ் செய்து வர வேண்டும்.
ஐஸ் கட்டி
ஐஸ் கட்டியை எடுத்து மெல்லிய துணியில் கட்டி, தழும்பு உள்ள பகுதிகளில் மென்மையாக ஒத்தடம் கொடுத்து வந்தால், இறுக்கமாக இருக்கும் தசைகள் தளர்வாகி, மென்மை தன்மையை அடைந்து தழும்புகள் விரைவில் மறையும்.
ஆரஞ்சுப் பழம்
நமது சருமத்தில் காயம் மற்றும் தழும்புகள் இருந்தால், அதற்கு விட்டமின் E நிறைந்த ஆரஞ்சு பழங்கள் போன்ற உணவுகளை தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.