சொந்தமாக 2 வீடுகள் வாங்கியுள்ளார் பேயாக நடித்து பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி.
தமிழ் பட முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நிக்கி கல்ராணி பெங்களூருவை சேர்ந்தவர். அவர் திரையுலகுக்கு வந்து 7 வருடங்கள் ஆகிறது. ‘1983’ என்ற மலையாள படத்தின் மூலம் அவர் சினிமாவுக்கு அறிமுகமானார். 2015-ல் ‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு வந்தார். அந்த படத்தில் அவர் பேய் வேடத்தில் நடித்தார்.
அதனால் கதாநாயகர்கள் ஒருவித பயத்தோடு அவரை பார்த்தார்கள். நாளாக நாளாக அவர் மீதான பயம் விலகியது. நிக்கி கல்ராணிக்கு நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கடவுள் இருக்கான் குமாரு, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கோ-2, கலகலப்பு-2, சார்லி சாப்ளின்-2 உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
சென்னை எழும்பூரில் உள்ள நவீன குடியிருப்பில் வீடு வாங்கினார். இந்த குடியிருப்பில்தான் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வசிக்கிறார். அவர் மூன்றாவது மாடியில் வசித்து வருகிறார். நிக்கி கல்ராணி 7வது மாடியில் வசிக்கிறார்.
இப்போது அவர் இன்னொரு புதிய வீடு வாங்கியிருக்கிறார்!