அதிக ஆபத்துள்ள பிரிவின் கீழ் வரும் தனியார் மருத்துவமனைகளில் இணைக்கப்பட்ட சில மருத்துவர்கள் உள்ளிட்ட நபர்களிற்கு அடுத்த சில நாட்களில் தேசிய COVID-19 தடுப்பூசி இயக்கத்தின் கீழ் தடுப்பூசி போடப்படவுள்ளது.
சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா கூறுகையில், அதிக ஆபத்து உள்ள பணிகளிலுள்ள முன்னணி ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவது உடனடியாக தொடங்கும் என்றார்.
ஓய்வுபெற்ற ஆனால் தனியார் கிளினிக்குகளை இயக்கும் மருத்துவர்கள் உட்பட தனியார் துறையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
மருத்துவ மற்றும் தாதிய மாணவர்களும் நோயாளிகளைச் சந்திப்பதால் இந்த விஷயத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. விமான நிலைய ஊழியர்களும் தடுப்பூசிகளைக் கோரியுள்ளதாகவும், இதுபோன்ற குழுக்களிற்கு எதிர்காலத்தில் தடுப்பூசி போடப்படும் என்றும் கூறினார்.
18 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க அரச மருந்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்