Loading...
முகப்பரு வந்தவுடன் அதை ஆரம்பத்திலே கிள்ளி எறியவேண்டும் என்ற எண்ணத்துடன் பருவை கிள்ளி விடுகின்றனர்.
பரு சிதைந்து நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறுகின்றன. இவை முகத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றது.
Loading...
இவற்றை நீக்க கண்ட கண்ட கிறீம்களை வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட எளியமுறையில் சரி செய்யலாம்.
தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- ஒரு ஃபேஸ் பேக்கிற்கு சம அளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, உலர்ந்த சரும பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் நன்றாக கழுவவும்.
- முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊறவைத்து பின் கழுவிட வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
- எலுமிச்சையை வைத்து ஃபேஷியல் கூட செய்யலாம். அதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன், 1/4 கப் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஃபேஷியல் செய்தால், சருமம் பொலிவாவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.
- எலுமிச்சை சாறு மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எலுமிச்சை சாற்றின் அமிலத்தன்மை கூந்தலின் pH-ஐ சமப்படுத்த உதவுகிறது, இதனால் பொடுகு வளர்ச்சியைத் தடுக்கிறது.
- எலுமிச்சை சாற்றில் உள்ள கிருமி நாசினிகள் பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகின்றன. முகப்பருவில் எலுமிச்சை சாற்றை தவறாமல் பயன்படுத்துவது வடுக்கள் மறைய உதவுகிறது.
Loading...