இந்நிலையில், கேரளாவில் ‘பைரவா’ படத்தை வெளியிட கேரள மாநில இளைஞர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளாவில் மலையாள படத்தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.
இதனால் மலையாள படங்கள் வெளியாவது தடைபட்டுள்ளது. மலையாள படங்கள் வெளியாகாத நிலையில், பிறமொழி படங்களை மாநிலத்தில் வெளியிடக்கூடாது. எனவே அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படங்களை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க முடியாது என்று இளைஞர் காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த திடீர் எதிர்ப்பால் கேரளாவில் ‘பைரவா’ மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘எஸ் 3’ ஆகிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணுமாறு கேரளாவில் உள்ள விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.